
நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாயாகவும், கோதுமை மா 265 ரூபாயாகவும், வெள்ளைப்பூடு 495 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.