ஏ8 ஜீப் கேட்ட பிரபல இராஜாங்க அமைச்சர்?

சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல V8 ஜீப் ஒன்றை கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

அத்துடன் குறித்த அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது .

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய இரண்டு V8 ஜீப்கள் தற்போது அமைச்சின் மேலதிக செயலாளர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு   தெரிவித்துள்ளது.

எனினும், சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொலவிற்கு குறித்த ஏ8 ஜீப்பில் ஒன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சருக்கு  BMW வாகனம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், குறித்த பெண் இராஜாங்க அமைச்சருக்கு அவ்வாறு வாகனம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *