மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் தாயார் திருமதி பரப்பாத்தி அம்மாவின் மறைவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமரர் சந்திரசேகரன் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலத்தில் அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட அவரது தாயார் திருமதி பரப்பாத்தி அம்மா மறைவு செய்தியானது மனவேதனை அளிக்கிறது.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.