விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு> லைக்கா ஞானம் அறகடக்டளை தலா 25 லட்சம் வழங்கியது!

இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மேலும் 5 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் (சுப்ரமணியம் மோகன், ராமசாமி கிருஸானந்தன், வேலு யோகராஜா, பிரம்மசிறி ரகுபதி ஐயர் ரகுபதிசர்மா, வேலாயுதன் வரதர்சன் ஆகியோருக்கு) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கி வைத்துள்ளார்.

அல்லிராஜா சுபாஸ்கரனின் வேண்டுதலுக்கு அமைய விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பது உணரப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, ஏற்கனவே விடுதலை பெற்ற 8 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த சில வாரங்களுக்கு முன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *