
அடுத்த வருடம் முற்பகுதியில் திருமணம் செய்து கொள்ளவிருந்த தனது எதிர்கால மனைவியின் வீட்டிலிருந்த 8 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை மணமகன் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்ற வீடு உடைப்பு தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களுடன் கொள்ளையிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
தமது வீடுகளில் கொள்ளையிட்ட பொருட்கள் இருக்கின்றனவா என பார்ப்பதற்கு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.
தனது மகளின் 8 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை பறிகொடுத்த பெண்ணும்,அவரது தாயாரும் பொலிஸ் நிலையம் வந்திருந்தார். இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை பார்த்த குறித்த பெண் அவர்களின் ஒரு நபர் தனது வருங்கால மருமகன் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் சந்தேக நபர்கள் போதை பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதை அறிந்து கொண்ட குறித்த பெண் சந்தேக நபரை பார்த்து இனிமேல் தமது வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என பொலிஸ் நிலையத்தில் வைத்தே எச்சரித்து விட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.