மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்றார் அன்வர் இப்ராகிம்!

கோலாலம்பூர், நவ 24

மலேசியப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேஷிய மன்னர் நியமித்ததை அடுத்து, இன்று மாலை நடைபெற்ற விழாவில் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.

மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி, சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது.

இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சார்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த நிலையில், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்றார். முன்னதாக, அன்வார் 1998 இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தன் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *