ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரை ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ நெல்லின் விலை 24 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய (24) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.
தற்போதைய அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து ஒரு மூடை நெல் 4,500 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசி ஆலை உரிமையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.