கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் தம்பலகாமம் பொற்கேணியை சேர்ந்ந இரத்தினராசா.சசிகுமார் நுண்கலைத் துறையில், இளங் கலைஞர் விருது பெற்றார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுல்வல்கள் திணைக்களத்தினால் திருகோணமலை உவர்மலையில் அண்மையில் இதற்கான விருது வழங்கும் வைபவம் இடம் பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நுண்கலைத் துறையில் 25 வருட கால அனுபவம் பெற்ற இ.சசிகுமார், நுண்கலைத் துறையில் சிறப்பாக சேவையாற்றியமையை பாராட்டியும், தொடர்ந்தும் சமூகம்சார் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் முகமாகவும் கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு ,பண்பாட்டலுவல்கள்,இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மூலமாக இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் விருதினை பெறுவதற்காக வழிகாட்டியாக அமைந்த தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் உட்பட சகலருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார் இ.சசிகுமார்.