இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி ஒன்று இன்று (25) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக மேற்படி தொழிற்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெல்டிங் பணியின்போது காற்றினால் தீப்பிடித்ததாகவும், இதனையடுத்து குறித்த பெட்டி முழுவதும் தீப்பிடித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.