இவரைத் தெரியுமா? பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மொனராகலை- இங்கினியாகல பிரதேசத்தில் இருந்து 13 அகவைச் சிறுமியை கடத்திச் சென்ற 47 அகவைக் கொண்ட ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தனது மகள் தன்னிடம் இருந்து கடத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற குறித்த நபரை, கைது செய்ய காவல்துறையினர், பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

சுமித் குணவர்தன என்ற பெயரைக் கொண்ட குறித்த நபர் தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் தொடர்பான எந்தவொரு தகவலையும் பின்வரும் எண்களுக்கு அனுப்பலாம்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இங்கினியாகல காவல்துறை பொறுப்பதிகாரியின் 0718 59 11 50 என்ற இலக்கத்துக்கோ, இங்கினியாகல காவல் நிலையத்தின் 063 2 24 20 22 என்ற இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *