வாரிசு கூட்டணியில் இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்

இந்தியா,நவ 25

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வாரிசு இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *