2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 5வது நாள் இன்று.
இதன்படி, பொது நிர்வாக அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான செலவினங்கள் மீதான விவாதம் இன்று (26) இடம்பெறவுள்ளது.
நேற்று (25) நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செலவினங்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை டிசம்பர் 09 ஆம் திகதி நடத்த நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டிசம்பர் 10 திகதி சனிக்கிழமை வாய்வழிக் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.