மூடிய அறைக்குள் வைத்து மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்!

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தையை இழந்த குறித்த மாணவனின் தாயார் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டில் சுகவீனமடைந்த மகனை அவதானித்து வினவியுள்ளார்.

காயங்களையும் அவதானித்த தாயார் குறித்த மாணவனை அழைத்துக் கொண்டு பாடசாலை அதிபரை சந்தித்து முறையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரியருக்கு மனநல குறைவு காணப்படுவதாகவும், அதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மகனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் அக்கறை கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கவில்லை என்பதுடன், சிகிச்சையும் வழங்க அனுமதிக்கப்படாமை தொடர்பிலும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அறையை பூட்டி தாக்கிய ஆசிரியை, கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டிருப்பின் நிலைமை மோசமாகியிருக்கும், அவ்வாறான ஆசிரியரை கடமைக்கமர்த்தியமை தொடர்பிலும் விசனம் வெளியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *