நாட்டில் ஆபத்தை எதிர்கொண்டுள்ள பறவை இனங்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.

2021 சிவப்பு தரவு புத்தகம்  தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் குறிப்பிட்டார்.

244 வகையான பறவைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த பறவை இனங்களை பாதுகாப்பதில் முழு  சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என  பத்மா அபேகோன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *