எண்பத்திரண்டு அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களின் தகவல்கள் வெளியில் செல்வது நல்லதல்ல எனவும் அமைச்சர்களிடம் தனித்தனியாகச் சென்று இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பலரும் அமைச்சர் மீது குற்றம் சுமத்திய போதிலும், மின்சாரத்தை துண்டித்தது அவர் அல்ல, மின்சார சபையே என அவர் தொடர்ந்து கூறினார்.
பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.