இன்றைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது ஆட்சி தெற்கில் இருக்கும் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படுகின்ற ஆட்சி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றை இன்று யாழில் நடாத்தியுள்ளார்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அந்த மக்கள் தாங்கள் வழங்கிய ஆணையை கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும்,அவருடைய நாடாளுமன்ற அரசாங்கமும்,கட்சியும் முழமையாக ஆணையை துஸ்பிரயோகம் செய்து மக்கள் மத்தியில் ஆணையை பெற்று அதற்கு நேர்மாறாக செயற்பட்டதாக கூறி தான் இந்த மக்கள் வந்து தெற்கிலேயே போராடி கடுமையாக போராடி அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என அவர் கூறினார்.
மக்கள் ஆணையை நிராகரித்ததை ஏற்றுக் கொண்டு தான் மகிந்த ராஜபக்ஷ ,கோட்டபாய ராஜபக்ஷ தங்களுடைய பதவியிலிருந்து விலகினார்கள்.தோற்கடிக்கப்பட்ட அந்த ஆட்சியை நாடாளுமன்ற உதவியுடன் இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் எத்தனையோ குழுக்களை உருவாக்கி நாடாளுமன்ற கட்டமைப்பில் உள்ள குழுக்களை காட்டி அது அரசாங்கத்தோடு நேரடியாக பேசுவதோ அல்லது அரசாங்கத்தொடு அணைந்து பயணிப்பதில்லை என்னும் தோற்றப்பாட்டை ஒரு புறம் வைத்துக் கொண்டு ,ஆனால் ,உண்மையிலேயே தன்னோடு இருக்க கூடிய கட்டமைப்புக்களிலே ஏனைய தரப்புக்களும் இணைந்து வந்து தங்களுடன் பேசுகின்றார்கள் ஒரு புறம் காட்டி,மறுபுறத்திலே வந்து தமிழ்கட்சிகள் தங்களை எமாற்றி வந்ந ரணில் விக்கிரமசிங்க,இந்த சிங்கள தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுகின்ற நிலையிலே, தங்களுக்கு ஒரு அங்கிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள் என்று சுட்டி காட்டி, ஒரு நிரந்த தீர்வை பெறுவதற்காக அழைத்து இருப்பதாக அவர் கூறினார்.
போலியான பேச்சுவார்த்தைக்கு எந்த ஒரு விதத்திலும் வந்து தமிழ்மக்களது அரசியல் அபிலாசைகளை தமிழ் தேசிய அங்கீகாரத்தையோ அல்லது தனித்துவமான இறைமையையோ வடகிழக்கில் வந்து சுயநிர்ணயத்தை அனுபவிக்க கூடிய சமஷ்டி தீர்வை வழங்குவதற்கு தயார் இல்லாத இடத்திலே ,மாறாக வந்த கடந்த காலங்களில் அவருடைய தீர்வு திட்டம் வந்து தெளிவான,இறுக்கமான ஒரு ஓற்றையாட்சிக்குள்ளே இருக்கின்ற பட்சத்திலே கூட்மைப்பும் அந்த ஆவணத்தை சமஷ்டி என்று சொல்லி மக்கள் மத்தியிலே கொண்டு செல்ல முயற்சித்த பின்னணியிலே இன்றைக்கு நாடாளுமன்றத்தில் சுமந்திரன் வந்து பேசி உள்ளார்.
அதே ஒற்றையாட்சி தீர்வு,இடைக்கால தீர்வு யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உடடினயாக நாடாளுமன்றத்தில் இருக்க கூடிய மூன்றில் இல் இரண்டு பெரும்பான்மையை நிறைவேற்றலாம் என்ற கருத்தை கூறி ,பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில், தழிழ்தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது விக்னேஸ்வரன் தரப்புக்கோ ஆசனங்கள் குறைவாக கிடைக்கும் என்று தெரிந்தபடியால் அதற்கிடையில் ஒற்றையாட்சியை தமிழ்மக்கள் விரும்பி இருக்கின்றார்கள் என்று மாபெரும் துரோகத்தை அடுத்த தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்ற சதித்திட்டத்தையும், நிறைவேற்றவதற்கு தான் அவர்கள் அவரசமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
நாங்கள், மக்களுக்கு தெளிவாக கூறுகின்றோம்.எந்ந அளவுக்கு தெற்கில் உள்ள மக்கள் தங்களுக்கு துரோகம் செய்யும் விதத்தில் தங்களுடைய ஆணை மூலம் தெரிவு செய்து வந்த தலைர்களை நிராகரிக்க துணிந்து வந்து விரட்டி அடித்தார்களோ, அதே போல சமஷ்டி என்று சொல்லி போட்டு ஒற்றையாட்சிக்குளே தமிழ்தேசிய அபிலாசைகளை முடக்குவதற்கு , இந்த சதிகளை முறியடிப்பதற்கு இந்த தலைவர்களை நிராகரிப்பதற்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தை தடுப்பதற்கு தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என நாங்கள் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.