படிப்படியாக தளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி – மத்திய வங்கி ஆளுநர்

ஏற்கனவே கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக தளர்ந்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் இலங்கை மிகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

தற்போது மத்திய வங்கியின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதும் மீள்வதுமாகும்.

வட்டி விகிதங்களை அதிகரிப்பது தொடர்பில் நாணயக் கொள்கையை கடுமையாக்குவதே முதல் முன்னுரிமை எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

சில பொருட்களுக்கான தேவையை குறைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் பொருளாதாரம் மந்தமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2023 வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்தின் பற்றாக்குறையை மிகவும் நிலையான நிலைக்குக் குறைக்க உதவும் அத்துடன் நிதிக் கொள்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்த போதிலும், தற்போது பணவீக்கம் வீழ்ச்சியடைந்து நாட்டில் அதிக பணவீக்கத்தைத் தடுக்கும் போக்கில் காணப்படுவதாக ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற இருதரப்பு கடனாளர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகளைப் பெற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெறுவதில் நம்பிக்கை இருப்பதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *