நுவரெலியாவில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

நுவரெலியா – வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று (01.12.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 

நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி – பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமூதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த நகரத்துக்கு பல அத்தியாவசிய விடயங்கள் தேவைப்படும் நிலையில் எதற்காக மதுபானசாலை திறப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பும், மக்கள், அந்த அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தால் நில்தண்டாஹின்னா நகரின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *