கெசல்வத்த பவாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக பிரமுகர் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் நான்கு வாள்கள் மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்டவர் 33 வயதான மொஹமட் கமில் மொஹமட் பவாஸ் என அறியப்பட்டது.
அதன்படி, அவர் கொழும்பு 12 இல் வசிக்கும் ‘கெசல்வத்தே பவாஸ்’ எனவும் அடையாளம் காணப்பட்டார்.
இதனிடையே, இந்த கொலையை செய்வதற்காக கொலையாளிகள் காரில் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.