முல்லை கடலில் காணாமற் போன மூவரில் இரண்டாவது நபரின் சடலம் சற்று முன்னர் மீட்பு

முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூவரில், இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள், கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.

குறித்த தேடுதலின் போது ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

குறித்த இளைஞர்களில் மதவுவைத்த குளத்தை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் தனுஷன் , 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் , 26 வயது தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் ஆகியோரே கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

நேற்றைய தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்க்கப்பட்ட நிலையில்,மற்றுமொருவருடைய சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *