கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து பரந்தன் ஊடாக பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை விலத்த முற்பட்ட டிப்பரின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் கான்ரில் பகுதியில் கொழுவி இழுத்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.