மாதகல் கடலில் 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் – மாதகல் கடலில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வந்த சமயம் கடற்படையினரை கண்டதும் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது. இந்த 275 கஞ்சாவையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *