ஐ. ம. சக்தியினர் சபை அமர்வைப் புறக்கணித்தது ஏன்? ஆளுங்கட்சி விளக்கம்

இன்று வீடமைப்பு அமைச்சு தொடர்பான விவாதம் நடக்கவுள்ளது. எனவே, அவ்வமைச்சுப் பதவியை வகித்த சஜித் பிரேமதாஸ செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர்.

இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிரணியின் செயற்பாடு மோசமாக உள்ளது. சபாநாயகரைக்கூடத் தாக்குவதற்கு முற்படுகின்றனர்.

நீங்கள் ஜனநாயகத் தலைவராக இருக்கின்றீர்கள். எதிரணிக்கு அதிக வாய்ப்பை வழங்குகின்றீர்கள்.

எனவே, உங்கள் மீது கை வைப்பதற்கு எவருக்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிரணியினர் ஊடக பிரச்சாரத்துக்காகவும், சர்வதேசத்துக்காகவுமே சபை அமர்வுப் புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *