திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று (06) மீட்கப்பட்டது.
தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின், குறித்த மோட்டார் குண்டை செயழிப்பது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
தற்போது, மீட்கப்பட்ட மோட்டார் குண்டை பொலிசாரின் பாதுகாப்பில் கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.