வடமராட்சியில் கரையொதுங்கிய இந்திய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரியவர் உயிருடன் உள்ளார்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய இந்தியர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரியவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த கடற்கரையில் நேற்று இந்தியப் பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் பரபரப்பு நிலவியிருந்தது.

இது இந்தியாவின் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் எனக் கண்டு கொள்ளப்பட்டுள்ளதோடு, அழகுபாண்டி தபாலக பிரிவு ஆழம்பதூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்தவர் எனவும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

தற்போது, குறித்த சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு உரியவர் உயிருடன் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், தனது சாரதி அனுமதிப்பத்திரம் அண்மையில் பெய்த பெருமழையில் அடித்துச்சென்றததை உறுதிசெய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *