டெங்குநுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, சுகாதாரப்பரிசோதர்கள் மற்றும் பணியாளர்கள் களவிஜயமொன்றை இன்று மேற்கொண்டுள்ளனர்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை நல்லூர் பொதுச்சுகாதார பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதர் எ.சஞ்சீவன் தலைமையில், டெங்கு கட்டுப்பாட்டுவார ஆரம்ப களவிஜயம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சுற்றுச்சூழலின் துப்பரவு, மழைநீர் தேங்கி நீங்ககூடிய கிரட்டை,வாழைத்தண்டு,பிளாஸ்டிக் கோப்பை,உள்ளிட்ட நுளம்புபரவக்கூடிய இடங்களை சோதித்தல், நுளம்பு பரவுகின்ற இடங்களை கண்டு அறிக்கையிடல் போன்றவற்றினை அவதானித்துள்ளனர்.
குறிப்பாக இன்று நல்லூர் பொதுச்சுகாதார பணிமனையுடாக கிராமசேவையாளர் பிரிவில் உள்ள ஜே/79 சிறாம்பியடி பகுதிகளிலும் மற்றும் ஜே/81 கிராமசேவையாளர்பிரிவில் உள்ள கொட்டடி பகுதிகளிலும் இந்த டெங்குநுளம்பு ஒழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த டெங்கு நுளம்புபரம்பல் கட்டுப்பாட்டு வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை அழுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

