பாலத்தடிச்சேனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ! பின்னணியில் வெளியான உண்மை

பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடு தம்மை இணைக்க வேண்டாமென, பாலத்தடிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், மூதூர் – பாலத்தடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மக்கள், மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை சுலோகங்களை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

பாலத்தடிச்சேனை தனி கிராம உத்தியோகத்தர் பிரிவை, பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடு இணைத்து, பட்டித்திடல் எனும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவாக உருவாக்குவதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, தமது தமது கிராம பாலத்தடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவை இல்லாமல் செய்ய வேண்டாம், பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடோ இணைக்க வேண்டாம்.ஏற்கனவே இருந்த தனி கிராம உத்தியோகத்தர் பிரிவு போன்று தனியான கிராம சேவையாளர் பிரிவாக இருப்பதற்கு ஆவணம் செய்யுமாறு பாலத்தடிச்சேனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாரக்கிடம், தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

இதன்போது மூதூர் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன.

இதனை 40 கிராம சேவையாளர் பிரிவுகளாக குறைப்பதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்கீழ்தான் பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடு பாலத்தடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவை இணைப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

எனினும் எமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை குறைக்கின்ற விடயத்தில் மீள் பரிசீலணை செய்யுமாறு தாம்கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *