
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் இங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்குக் கோரிக்கை முன்வைக்கவில்லை. அவ்வாறு யாராவது கோரிக்கை முன்வைத்தாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையிலான மூலோபாயத் திட்டம் தயாரிக்கும் கலந்துரையாடல் கடந்த இரண்டு நாள்களாக இடம்பெற்றது. இதில் பங்கேற்ற அவர் ஊடக சந்திப்பை நேற்று நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.