
ஆபத்தான கொரோனாத் திரிபாகத் கருதப்படும், ஒமிக்ரோன் திரிபு பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நாடு மீண்டும் முடக்கத்துக்கு செல்லாதிருப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது என்று தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய மாறுபாடுகள் தொடர்பாக நிபுணர்கள் மாறுப்பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர் என்றும், முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
நாடு மீண்டும் முடக்க நிலைமைக்குச் செல்லாதிருக்க, பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.