சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரச திணைக்களங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பால் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட உதவிகளை நடைமுறைப்படுத்தக் கோரி நினைவூட்டல் நிகழ்வு ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகம் முன்பாக இன்றுஇடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.எம்.றபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தல் வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் தேசிய செயற்றிட்ட செயற்பாட்டை முழுமையாக செயற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மூன்று வீதி அரச வேலைவாய்பபை உறுதி செய்ய வேண்டும், மாவட்ட வைத்தியசாலையில் அவயங்கள் தயாரிக்கும் பிரிவை இயங்க நடவடிக்கை எடுத்தல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.
