கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பாகிஸ்தான் நாட்டில் படுகொலைச்செய்யப்பட்ட பொறியியலாளர் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்து, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
பிரியந்த குமாரவின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் நீதி கோரியுள்ள நிலையிலேயே, கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று மாலை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.


