குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

குளிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பூநகரி, நல்லூர் பகுதியில் நடந்துள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா மோகனலிங்கம் (வயது=66) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வழமைபோன்று நேற்று குளிப்பதற்காகக் குளத்துக்குச் சென்றவர் வயல் வெளியில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *