நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப்போவதாக பகிரங்கமாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினர் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உணவருந்திக் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்து உணவகத்தில் இருந்தீர்களா என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கேள்வி எழுப்பியுள்ளார்.