
மின்சாரத்தை நாளை (07) முதல் தடையின்றி வழங்க முடியுமென இலங்கை மின்சார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை (03) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறின் காரணமாக பா நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீரமைக்கப்படும் வரை பல பகுதிகளில் மணிக்கணக்காக மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை 6 மணி முதல் 09 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.
நாளைய தினம் தடையின்றி மின்சாரம் வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
