பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான், குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் குறித்த 26 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி மீள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

