பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர்களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும்.
குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.