வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனாத் தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து துரித அன்ரியன் பரிசோதனையை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது, அவருக்கு தொற்று நோய் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டமையால் கொரோனாப் பாதிப்பை மிகக் குறைவான அளவிலேயே உணர்வதாக தெரிவித்தார்.
நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து! ரணில் எச்சரிக்கை