நாடாளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பக்கச்சார்பாகச் செயற்படுவதைக் கண்டுகொள்ள முடியுமாக இருக்கின்றது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி எம்.பியான மனுச நாணயக்காரவைத் தாக்க முற்பட்டபோதும், சபாநாயகர் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
சபாநாயகரின் கண்முன்னே நடைபெற்ற சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் குழுவொன்றை நியமிப்பது வேடிக்கையான விடயம்.
சபாநாயகரானதும் கட்சியின் பதவியைக் கைவிட வேண்டும். இவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெலிகம பிரதேச அமைப்பாளராகச் செயற்படுகின்றார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிரணியினரை சந்தித்த பிரதமர்