கற்பிட்டி – கப்பலடி கடற்கரைப் பகுதியில் இன்று மாலை, கடலாமையை சூட்சுமமான முறையில் உரைப் பையில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடலாமை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்காக பிடிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடலாமை காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டமையால் சிகிச்சையளிப்பதற்காக கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடலாமை ஒலிவ நிற வகையைச் சார்ந்தது என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்! இரா.துரைரெத்தினம்