பிரியந்தவின் உடற்பாகங்கள் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்..!

பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (07) அதிகாலை கனேமுல்லையிலுள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் விமான சேவை மூலம், பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நேற்று (06) மாலை 5 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உடற்பாகங்கள், கனேமுல்லை கந்தலியத்த பாலுவ பிரசேத்திலுள்ள அவரது இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டன.

பாகிஸ்தான் – சியல்கோட்டின் வசிராபாத் வீதி பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை பிரியந்த குமார தியவடன கொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *