இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியந்த குமாரவின் பூதவுடல் நேற்று மாலை லாகூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து, சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டடு, அங்கு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் இன்று பிற்பகல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியந்தவின் பூதவுடலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொணடுவந்தபோது பிரியந்தவின் மனைவி மற்றும் அவரது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அவரது உடலை சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டியில் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அதன் பிறகு குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அவரது மனைவி நிலுஷி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *