பிரியந்த குமாரவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸாரினால் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பில்லி எனப்படும் குறித்த சந்தேகநபர், Rawalpindi நகரம் நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 08 சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 26 பேருக்கு நேற்றைய தினம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரியந்த குமாரவின் சடலம் இன்று அதிகாலை கனேமுல்லையிலுள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளைய தினம் கனேமுல்ல பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.