சியால்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்காது – இலங்கை உயர்ஸ்தானிகர்

சியால்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட நாடுகளாகவே இருக்கும் என்றும் இச்சம்பவம் எமது உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தான் உறுதியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பி உரையாற்றிய அவர், பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவைப் பாராட்டியதுடன், பாகிஸ்தான் மக்களின் அனுதாபங்களுக்கும் இரங்கலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.

மேலும் பிரியந்தவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் இது ஒரு கொலை என்பதால், இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தாங்கள் நண்பர்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சமூக, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன என்பதுடன், இந்த சம்பவம் தற்போதுள்ள உறவை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *