வவுனியா வடக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

<!–

வவுனியா வடக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – Athavan News

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் (08.12.21) கனகராஜன்குளம் வைத்தியசாலையிலும்இ (09.12.21) புளியங்குளம் வைத்தியசாலையிலும்  (10.12.21) நைனாமடு பொதுநோக்கு மண்டபத்திலும் (13.12.21) நெடுங்கேணி வைத்தியசாலையிலும் (14.12.21) கற்குளம் பொதுநோக்கு மண்டபத்திலுமாக 5 நிலையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஏற்றப்படவுள்ளது.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுஇ மூன்று மாதங்கள் கடந்திருப்பின் தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று மூன்றாவது தடுப்பூசி பூஸ்டரினை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர்  அறிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *