திருகோணமலை ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
திருகோணமலை சீனக்குடா – கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது பஸ் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது
வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பஸ், வீதியை விட்டு விலகி கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரனைகளை சீனக்குடா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.