கிண்ணியா கல்வி வலயத்தில் 13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் மூன்று பாடசாலைகள் கல்வி அமைச்சினால் உள்வாங்கப்பட்டுள்ளன.
கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம், கிண்ணியா அல் இர்பான் மகாவித்தியாலயம், கிண்ணியா தாருல் உலூம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பாடசாலைகளில் குறித்த கல்வி நடவடிக்கையினை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளர்
ஏ. நசூகர்கான் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
13 வருட உத்தரவாத கல்வித்திட்டம் தொடர்பாக நேற்று (6) கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் இந்த கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தில் காதலர்களுக்கு விசேட பரிசாம்..! அரசாங்கம் அறிவிப்பு