இலங்கை இராணுவ படைகளின் 59 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி ஜெனல் ஷவேந்திர சில்வாவின் பரந்துரைக்கு அமையஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ படைகளின் 58ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராஇ ஓய்வு பெற்றுள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ மேஜர் ஜெனரல் விகும் லியனகேஇ இதற்கு முன்னர் இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது