பிறப்புச் சான்றிதழில் மாற்றம்! அமைச்சரவை தீர்மானம்

பிறப்புச் சான்றிதழை வழங்கும் போதுஇ அதில் இலங்கை அடையாள இலக்கத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படிஇ பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.

முன்னதாகஇ ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அடையாள இலக்கங்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்இ இனிவரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கும் அதற்கான அங்கீகரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்இ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழி ஊடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும்இ

குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளைஇ இந்த அடையாள இலக்கத்தைஇ தேசிய அடையாள அட்டையை தயாரிக்க பயன்படுத்துவதற்கும்இ பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயல்பாடுகளின்போதுஇ பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கும் வசதியாக இருக்கும் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *