வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம்வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்ககளிலேயே குறித்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இரவு குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடிச்சென்றிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகைதந்தபோது கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் அதிகாலை இடம்பெற்றிருக்கலாம், என சந்தேகிக்கப்படுவதுடன் குறித்த கடைகளில் இருந்து பல இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
