வவுனியாவில் வெளிமாவட்ட வர்த்தகர்கள் அத்து மீறல்..! தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலைமைகள்

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் வெளிமாவட்டத்திலிருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அத்துடன் கொரோனா விதிமுறைகளை அனைத்தும் மீறப்பட்டு இங்கு தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலைமைகள் மீண்டும் உருவாகியுள்ளது .

இந்நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்தி மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்களைத்தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை .

நகரசபையின் கனவத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் எவ்விதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வவுனியாவிற்கு வெளிமாவட்டத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது . ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சுகாதாரத்துறையினரின் அனுமதிகள் உட்பட தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் .

ஆனால் வவுனியாவில் அந்நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை . வெளிமாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வரும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை புகையிரத நிலையம் , இலுப்பையடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வவுனியாவை தளமாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள் நகரசபையினருக்கு வரி உட்பட வர்த்தக நிலையங்கள் , ஊழியர்களுக்கு பெரும் தொகைப்பணங்களை செலவிட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அத்துடன் வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களினால் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலைமைகளும் மீள உருவாகியுள்ளது . இதனால் நகரில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படும் நிலைமைகளும் காணப்படுகின்றனர் . இவ்விடயம் குறித்து நகரசபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் எவ்விதமான இறுக்கமான சுகாதார நடவடிக்கையும் இன்றுவரையும் பின்பற்றப்படவில்லை . என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *